புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. அவ்வப்போது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி வந்தார். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுப்படி ஆனதால், அன்று இரவே அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் சிபிஐ அதிகாரியால் கைது செய்யப்பட்டார்.
15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிற்பித்தார். இதனையடுத்து தற்போது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் உள்ளார்.
இந்தநிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
எனது சார்பாக ட்வீட் செய்ய எனது குடும்பத்தினரை நான் கேட்டுக்கொண்டேன்...!!
மக்கள் என்னிடம் கேட்டார்கள் 'இந்த ஒப்பந்தத்தை பரிந்துரை செய்த டஜன் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை என்றால், நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? நீங்கள் கடைசி கையெழுத்து மட்டும் போட்டதற்காக மட்டுமா?' எனக் கேட்கிறார்கள்.
ஆனால் "என்னிடம் பதில் இல்லை."
"எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை."
இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.