"பத்மாவத்" படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான அறிவிப்பை தெரிவித்துள்ளது.

Last Updated : Jan 23, 2018, 01:08 PM IST
"பத்மாவத்" படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி! title=

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இத்திரைபடத்துக்கு திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, பல்வேறு இடங்களில் இப்படத்திற்கு தடை வித்தித்தனர். இதையடுத்து, இப்படத்திற்கு தடை விதிக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜ.-ஆளும் 4 மாநிலங்கள் பத்மாவத் படத்துக்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்கி இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் எனவும் படத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தடை விதிக்க கோரிய மனுவை, நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

 

 

 

 

Trending News