பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திற்கு (RSS) எதிரான தனது ட்வீட் மூலம் இந்தியாவின் உள் விஷயங்களில் மீண்டும் இறங்கியுள்ளார்!
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான நாடு தழுவிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இம்ரான் கான் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கும் விதமாக "முஸ்லீம் இனப்படுகொலைக்கு RSS வழிவகுப்பதற்கு முன் எழுந்திருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
கானின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்பின் அடிப்படையில் போராளிகள் உருவாகும்போது "அது எப்போதும் இனப்படுகொலையில் முடிவடைகிறது" என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், RSS தன்னார்வலர்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் பிரவுன் ஷர்ட்டுடன் ஒப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "முஸ்லீம் இனப்படுகொலைக்கு RSS வழிவகுப்பதற்கு முன் சர்வதேச சமூகங்களே எழுந்திருங்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்பின் அடிப்படையில் (அடோல்ஃப் ஹிட்லரின் படை அல்லது RSS போன்ற) போராளிகள் உருவாகும்போது அது எப்போதும் இனப்படுகொலையில் முடிவடையும்." என குறிப்பிடுள்ளார்.
The int community should wake up before RSS on the move leads to genocide of Muslims that will dwarf other genocides. Whenever militias like Hitler's Brown Shirts or RSS are formed, based upon hatred of a certain community, it always ends in genocide. https://t.co/bnxJknIbO6
— Imran Khan (@ImranKhanPTI) December 26, 2019
முன்னதாக தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் RSS தன்னார்வலர்களை நடத்திய ஊர்வலம் குறித்த வீடியோ பதிவினை மேற்கொள்காட்டி கான் தனது ட்விட்டை தட்டியுள்ளார்.
வீடியோவில், புதன்கிழமை நடைபெற்ற முதல் RSS-தெலுங்கானா ப்ரந்த் சந்திப்பிற்காக நூற்றுக்கணக்கான RSS காரியகார்த்தங்கள் ஹைதராபாத் தெருக்களில் அணிவகுத்து வருவதைக் காணலாம்.
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை CAA எதிர்ப்பு போராட்டங்களில் இதுவரை 19 பேர், கர்நாடகாவில் இரண்டு பேர், அசாமில் ஐந்து பேர் பல வாரங்களுக்கு முன்பு போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இறந்துள்ளனர். தேசிய தலைநகர் புது தில்லி உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே RSS தனது பேரணியினை ஹைதராபாத்தில் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட RSS பொதுகூட்டத்தில் பேசிய RSS தலைவர் மோகன் பகவத்., நாட்டின் 130 கோடி மக்கள் தொகையும் இந்துக்களே என குறிப்பிடும் விதமாக "RSS ஒருவரை இந்து என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்று அர்த்தம்... பாரத தாய் இந்தியாவின் மகன்/மகன் எந்த மொழியைப் பேசுகிறார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், எந்த விதமான வழிபாட்டைப் பின்பற்றுகிறார் என பார்ப்பது இல்லை, எவ்வாறாயினும் அவர் ஒரு இந்து" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் "ராஷ்டிரிய சங்கத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் 130 கோடி மக்களும் ஒரு இந்து சமுதாயம். RSS அனைவரையும் தங்கள் சொந்தமாகக் கருதுகிறது, அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல சங்கம் விரும்புகிறது," என தெரிவித்துள்ளார்.