குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி

இம்ரான் கானின் கீழ்தரமான அரசியலுக்கு கடுமையாக பதிலடி கொடுத்த இந்தியா, எல்லையில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் அபத்த அரசியல் என்று கூறியது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 11:21 PM IST
  • கஷ்மீரில் 370வது சட்ட பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவு பெற உள்ள நிலையில், விரக்தி நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார்.
  • பாகிஸ்தானிற்கு கூடுதல் தலைவலியாக, பலுசிஸ்தான் மற்றும் சிந்தியில் உள்ள பிரிவினை வாத குழுக்கள், இணைந்து பாகிஸ்தான்-சீனா வின் பொருளாதார திட்டத்தை எதிர்க்கின்றன.
  • கடந்த ஒரு வருட காலத்தில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை ரத்து செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச தளத்தில் பெரிதும் முயன்றார்.
குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி title=

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜூனாகத் பகுதியையும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதியையும் பாகிஸ்தானுடன் இணைத்து காட்டும் அந்நாட்டு வரைபடத்தை வெளியிட்டார். 

அதோடு மட்டுமல்லாமல் வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்த இந்தியா இது எல்லையில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் அபத்தமான அரசியல் என்று கூறியது.

துரதிஷ்ட வசமாக, இந்த அபத்தமான கூற்றுகள் சட்ட ரீதியாகவோ, சர்வதேச விதிமுறைகளின் கீழோ, செல்லுபடியாது. இது பாகிஸ்தானிற்கு ஒரு அல்ப சந்தோஷத்தை கொடுக்கும் என்பதைத் தவிர வேறு எந்த பயனும் இல்லை.

ALSO READ | அமெரிக்கா கனடாவிற்கு சீனாவில் இருந்து வரும் மர்ம விதைகள்... சதி வேலையா..!!!!

கஷ்மீரில் 370வது சட்ட பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவு பெற உள்ள நிலையில், விரக்தி நிலையில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவையும், துருக்கியையும், இந்தியாவை கண்டித்து அறிக்கை விடும்படும் படி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலத்தில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை ரத்து செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச தளத்தில் பெரிதும் முயன்றார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள வரைபடம், அவரது விரக்தி நிலையை தெளிவாக எடுத்து காட்டுகிறது. 

சீனா பாகிஸ்தான் பொருளாதார திட்டம் தொடர்பாக நெருக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானிற்கு கூடுதல் தலைவலியாக, பலுசிஸ்தான் மற்றும் சிந்தியில் உள்ள பிரிவினை வாத குழுக்கள், இணைந்து பாகிஸ்தான்-சீனா வின்  பொருளாதார திட்டத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க உள்ளன.

ALSO READ | அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு..!!

இதனால், இந்த பொருளாதார திட்டங்களுக்கான பாதுகாப்பு செலவுகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் தோல்விகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை விரத்தி நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

Trending News