பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாணவர்களை மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி திட்டம் 2020 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் படி தேர்வுக்கு மாணவர்களின் தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு தேர்வுகள் அற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிபிசி (Pariksha pe charcha) திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தேர்வுகளுக்கு பதிலாக தனித்துவத்தை சோதிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தேர்வற்ற தனித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Exams are approaching and so is Pariksha Pe Charcha!
Let us keep working together to ensure stress free examinations.
Here is a unique contest for student of Classes 9 to 12. The winners will get to attend PPC 2020 early next year! https://t.co/8Ii60TzpBL
— Narendra Modi (@narendramodi) December 5, 2019
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது 5 கருப்பொருளை தேர்வு செய்து, அது பற்றி 1500 வார்த்தைகளில் எழுத வேண்டும். Gratitude is Great, Your Future depends on your aspirations, Examining Exams, Our duties you take, Balance is beneficial ஆகிய கருப்பெருள்களில் ஏதாவது ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என மோடி கூறியுள்ளார்.