ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி - திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடா?

புதியவகை கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

Written by - ZEE Bureau | Last Updated : Dec 5, 2021, 03:14 PM IST
ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி - திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடா?

கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  இதனையடுத்து மக்கள் அதிகம் பொழுதுபோக்க செல்லும் திரையரங்குகள் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது முழுவதுமாக மூடப்பட்டது.

ALSO READ தொடர்ந்து ஸ்டார் ஹீரோ படங்களை வாங்கி குவிக்கும் NETFLIX!

அதன்பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.  அதனடிப்படையில் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அரசு அனுமதியளித்தும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தியது.  இருப்பினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் திரையரங்கிற்கு செல்ல தயக்கம் காட்டி வந்தனர்.

thertre

இதனையடுத்து மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறைந்ததை அடுத்து பொங்கல் பண்டிகையிலிருந்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்ல தொடங்கினர்.  பின்னர் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  சமீபத்தில் அண்ணாத்தே படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் மக்கள் பழைய உற்சாகத்துடன் திரங்குகளுக்கு படையெடுத்தனர்.  இந்நிலையில் உருமாறிய கொரோனாவின் ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.  இருப்பினும் திரையரங்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்து வரும் நிலையில், இதே நடைமுறை தொடருமா? அல்லது ஒமிக்ரான் பரவலால் மீண்டும் திரையரங்குகள் மூடப்படுமா? என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிதான் அவர்களிடம் கேட்டபோது, ஓமிக்ரான் வைரஸ் குறித்து அமைச்சர் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

ALSO READ டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மிது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News