இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு - குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இலவச ரேசன் திட்டத்தை 80 கோடி மக்களுக்கு உதவும் வகையில் அதை விரிவுப்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2022, 09:14 PM IST
  • குஜராத்தின் அம்பாஜி கோயில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • அம்பாஜியில் 7,200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
  • காந்திநகர் - மும்பைக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் தொடக்கிவைத்தார்.
இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு - குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு title=

குஜராத்தின் அம்பாஜி நகரில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"இந்த பண்டிகை காலத்தில் எனது சகோதரிகளுக்கு உதவ, அரசாங்கம் அதன் இலவச ரேசன் திட்டத்தை நீட்டிக்கிறது" என அறிவித்தார். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இக்கட்டான காலங்களில் நிவாரணம் வழங்க மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,"ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில், இதுவரை நாட்டில் 3 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி ஏழைகளுக்கு வழங்கியுள்ளோம். இதில் பெரும்பாலான வீடுகள் பெண்களுக்கு சொந்தமானவை.எனது சொந்த மாநிலத்திற்குச் வருவதற்கு இது ஒரு நல்ல நேரம். நவராத்திரியின் போது அம்பாஜியில் இருப்பது அதிர்ஷ்டம். 

மேலும் படிக்க | Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் - குவியும் பாராட்டு

இங்கு தொடங்கப்படும் திட்டங்கள் இப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, நாட்டின் வடமேற்கு பிராந்தியத்தின் சித்திரம் முற்றிலும் மாறியுள்ளது. இந்த பகுதியின் நிலைமையை மாற்றியதில் நீர், சுஜலாம்-சுபலாம், நர்மதா சொட்டு நீர் பாசனம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. இதன், பங்களிப்பிலும் பெண்களின் பங்கு அதிகமுள்ளது. 

பெண்களுக்கான மரியாதை என்று பேசும்போது, ​​அது நமக்கு மிகவும் சாதரணமாக தோன்றும். ஆனால் அது குறித்து தீவிரமாகச் சிந்திக்கும்போது, ​​நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எவ்வளவு மரியாதை பொதிந்துள்ளது என்பதை நாம் அறிய முடியும். நம் இந்தியாவை ஒரு தாயாகப் பார்க்கிறோம். பாரத தாயின் குழந்தைகள் நாம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் - மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். 

இந்த வந்தே பாரத் ரயில் மூலம், பக்தர்கள் எளிதாக அம்பாஜி நகருக்கு வர இயலும். பிரசித்தி பெற்ற அம்பாஜி கோயில், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

மேலும் படிக்க | 'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு - குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News