பிரதமர் மோடி என்ன கடவுளா? அவரது கல்வித் தகுதி என்ன? அசோக் சவான் சர்ச்சை பேச்சு

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மீண்டும் பிரதமர் குறித்து பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2018, 04:35 PM IST
பிரதமர் மோடி என்ன கடவுளா? அவரது கல்வித் தகுதி என்ன? அசோக் சவான் சர்ச்சை பேச்சு title=

பிரதமர் நரேந்திர மோடியை "படிப்பறிவில்லாதவர்" என்று கூறிய சர்ச்சை கிளப்பிய மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மீண்டும் பிரதமரரை குறித்து "நரேந்திர மோடி ஒன்றும் கடவுள் இல்லை" அவரிடம் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு எனக் கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். 

இது ஜனநாயகம். பிரதமர் மோடி ஜனநாயகத்தின் கடவுள் இலை. அவரை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக அவர் அலங்காரிக்கப்படுகிறார். மேலும் என்னுடைய வார்த்தைகளை அவரை அவமதிப்பதாக இல்லை என்றும் தெரிவித்தார். 

மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள பள்ளிகூடங்களில் பிரதமரின் மோடியின் வாழ்க்கை குறித்த ஒரு குறுகிய படம் திரையிடப்படும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், பிரதமர் மோடிக்கு எதிராக மேற்கூறிய கருத்து தெரிவித்தார் 

மேலும் பள்ளிகூடங்களில் மோடியை குறித்த படம் திரையிடுவதற்கான முடிவு தவறானது. அரசியலில் இருந்து குழந்தைகள் விலகி இருக்க வேண்டும். கல்வி அறிவு இல்லாத, சாதாரண நபர் பற்றி அறிந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? என நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியிருந்தார்.

தன்னை தற்காத்து, பிரதமரின் கல்வி விவரங்களை அளிக்க தில்லி பல்கலைக்கழகம் ஏன் விரும்பவில்லை என அசோக் சவான் கேள்வி எழுப்பினார். "பிரதமரின் கல்வித் தகுதியைப் பற்றி குழந்தைகள் கேட்டால், அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? மக்களுக்கும் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தெரியாது. பிரதமரின் கல்வி விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தில்லி பல்கலைக்கழகத்டுக்கு அழுத்தம் கொடுப்பது யார்? மேலும் எந்த கால கட்டத்தில் அவர் அங்கு படித்தார் என்றும் கேட்டுள்ளார் அசோக் சவான்.

அசோக் சவான் கருத்துக்கு பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

Trending News