தீவிரவாதத்தை இறுதிவரை பொறுத்துக் கொண்டே இருக்க முடியாது: மோடி

தீவிரவாதப் பிரச்சனையில் இறுதிவரை பொறுத்துக் கொண்டே இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 10, 2019, 02:28 PM IST
தீவிரவாதத்தை இறுதிவரை பொறுத்துக் கொண்டே இருக்க முடியாது: மோடி title=

தீவிரவாதப் பிரச்சனையில் இறுதிவரை பொறுத்துக் கொண்டே இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!

உத்திரபிரதேசம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கி 50 ஆம் ஆண்டு விழாவையொட்டி நடந்த பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மறைந்த வீரர்களின் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர், வாகனத்தில் சுற்றிவந்து வீரர்கள் மற்றும் விழாவுக்கு வந்திருந்தவர்களை சந்தித்த அவர், ஆண், பெண் CRPF வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மேலும், வீரர்களுக்கு பதக்கமும், கவுர லட்சினைகளையும் பிரதமர் வழங்கினார்.

இதையடுத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார். திறந்தவெளி வாகனத்தில் சென்றபடியும் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், தேசியக் கொடியின் மூவர்ணங்களுடன் கூடிய தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த ஜெய் ஹோ என்ற பாடல் இசைக்கப்பட்டது.

பின்னர் பேசிய நரேந்திரமோடி, தீவிரவாதப் பிரச்சனையில் இறுதிவரை பொறுத்துக் கொண்டே இருக்க முடியாது எனக் கூறினார். எதிர்த்துப் போரிடும் திறன் இல்லாத அண்டை நாடு என பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டில் தீவிரவாத செயல்களுக்கு துணைபோவதுடன், அத்தகைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் பாகிஸ்தானை சாடினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சதித் திட்டத்தை முறியடிப்பதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என அவர் தெரிவித்தார். புதிய இந்தியாவை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பாதுகாப்புக் கட்டமைப்பில் வி.ஐ.பி. கலாச்சாரம் தடங்கலை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

 

Trending News