புதிய கல்விக் கொள்கை விவேகானந்தரின் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு உருவாகியது: PM Modi

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2021, 01:36 PM IST
  • நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம்.
  • தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
  • வாரிசு அரசியலில் தன்னலமும் குடும்ப நலனும் தான் முக்கியமாக இருக்கும் என்று மோடி கூறினார்.
புதிய கல்விக் கொள்கை விவேகானந்தரின் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு உருவாகியது: PM Modi  title=

ஒவ்வொரு ஆண்டும்,  சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, தேசிய இளைஞர்  தினமாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டு, தேசிய இளைஞர் விழாவுடன்  தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவும், நடத்தப்படுகிறது.

நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம் ஆகும். மேலும், இளைஞர்களிடையே, சகோதரத்துவம், தேசிய ஒற்றுமை, தைரியம், மத நல்லிணக்கம், ஆகியவற்றை வளர்த்து, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வையும் கருத்தையும், பரப்பும் நோக்கிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், 24 வெவ்வேறு போட்டிகளில் 7 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி இந்த நிகழ்வின் வெற்றியாளர்களை வாழ்த்தினார். 

"நாட்டின் அரசியலுக்கு இளைஞர்கள் தேவை, அரசியல் நேர்மறையான மாற்றங்களைச் ஏற்படுத்துவதற்கான ஒரு ஆக்கபூர்வமான ஊடகம். வாரிசு அரசியல்  ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஏனென்றால் வாரிசு அரசியலில் தன்னலமும் குடும்ப நலனும் தான் முக்கியமாக இருக்கும். நாட்டின் நலன் முக்கியமாக இருக்காது"என்று மோடி கூறினார்,

சுவாமி விவேகானந்தரைப் (Swami Vivekananda) பற்றி குறிப்பிடும்போது, ​​பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்படாதவர் என இந்தியாவில் யாரும் இல்லை என்று கூறினார். 

அப்போது அவர், பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை (New Educational Policy), விவேகானந்தரின் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு உருவாகியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

ALSO READ | National Youth Day: மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News