காங்கிரஸ் கட்சியால் இதை செய்ய முடியுமா? சவால் விடும் மோடி!

காந்தி குடம்பத்தை சேராத ஒருவரை, அக்கட்சியின் தலைவராக்க காங்கிரஸ் முன்வருமா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2018, 02:53 PM IST
காங்கிரஸ் கட்சியால் இதை செய்ய முடியுமா? சவால் விடும் மோடி! title=

காந்தி குடம்பத்தை சேராத ஒருவரை, அக்கட்சியின் தலைவராக்க காங்கிரஸ் முன்வருமா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்!

வரும் நவம்பர் 20-ஆம் நாள் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கரின் அம்பிகாப்பூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். 

பிரச்சாரத்தின் போது காந்தி குடும்பத்தை சேராத ஒருவர், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய அடிமட்ட தொண்டன் ஒருவரை அக்கட்சியின் தலைவராக்க காங்கிரஸ் கட்சி முன்வருமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சிகளில் சிறந்த ஆட்சி நேருவின் ஆட்சி தான் எனவும், நேரு ஜி ஒரு சிறப்பான குடியாட்சியை உறுவாக்கினார் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சாடிய மோடி... காங்கிரஸ் கட்சியினரால் தொடர் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக-வின் அடிமட்ட தொண்டானான நான்; தேனிர் வியாபாரியான நான் பிரதமராக ஆனது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியினர் பாஜக-வின் மீது வீன் பழி சுமத்தி வருகிறது. நான் பதவியேற்று சுமார் 4.5 ஆண்டுகள் ஆன பின்னரும், காங்கிரஸ் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வேடிக்கையான ஒன்று, எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நக்சல் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் முதற்கட்ட வாக்குப்பதினை வெற்றிகரமாக முடித்த வாக்காளர்கள், காங்கிரஸினை மீண்டும் வாயடைக்க வைக்க வரும் தேர்தலையும் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னேற்றத்திற்கான பாதையின் இந்தியாவினை எடுத்துச் செல்லும் அரசிற்கு வாக்காளர்கள் மீண்டும் வாய்பளிப்பர் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் CM ராமன் சிங் மீண்டும் நான்காவது முறையாக மாநில முதல்வராக பதவியேற்பார் என பாஜக நம்புகிறது. ஆனால் பாஜக-வினை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி-யின் ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் கூட்டணியும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 

Trending News