நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஒற்றுமையின் சிலைக்கு ரயில் சேவை தொடக்கம்!

குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவையை காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2021, 12:54 PM IST
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஒற்றுமையின் சிலைக்கு ரயில் சேவை தொடக்கம்! title=

குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை பகுதிக்கு புதிய விரைவு ரயில் சேவையை காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

இன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஒற்றுமையின் சிலைக்காக 8 சிறப்பு ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் ஒற்றுமை சிலையை (Statue of Unity) இணைக்க 8 புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவக்கிவைத்தார். லிபர்ட்டி சிலையை விட, சுற்றுலா பயணிகள் (Tourists) ஒற்றுமை சிலைக்கு அதிகம் வருகிறார்கள். இப்போது ரயில் சேவையின் வருகை சுற்றுலா பயணிகளுக்கு உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில், நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமை சிலை’ (Statue of Unity in Kevadia) என்று அழைக்கப்படும் இச்சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கேவடியா பகுதியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 8 புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ALSO READ | மருத்துவ கண்காணிப்பில் AIIMS Security Guard: தடுப்பூசிக்கு பிறகு பின்விளைவுகளால் பாதிப்பு 

குஜராத்தின் கேவடியா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் ரெயில்கள் இயக்கப்படும் மற்ற பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ரெயில் சேவையை துவக்கி வைத்தனர்.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு இயக்கப்படும் இந்த ரெயில்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருக்கையில் இருந்துகொண்டே வெளியே இருப்பதை பார்க்கும் வகையில் ரெயில் பெட்டிகளின் பக்கவாட்டு பகுதிகளும், மேற்கூரைகளிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒற்றுமை சிலையையும், அதை சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News