புதுடெல்லி: நாடு முழுதும் COVID-19 நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் முதல்கட்ட நடவடிக்கைகள் நேற்று துவங்கின. டெல்லியின் எய்ம்ஸில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு செக்யூரிட்டி கார்டுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட சில மணி நேரங்களில் ஒவ்வாமை அல்லது அனாபிலாக்ஸிஸ் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அனாபிலாக்ஸிசால் சொறி, குறைந்த அளவு நாடித் துடிப்பு, அதிர்ச்சி உள்ளிட்ட தொடர்ச்சியான அறிகுறிகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செக்யூரிட்டி கார்ட் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
20 வயதான அவருக்கு COVID-19-க்கான தடுப்பூசி கோவாக்சின் ஒரு டோஸ் வழங்கப்பட்டது. இது தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றாகும்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சினை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு இது வழங்கப்பட்டது.
எய்ம்ஸ் (AIIMS) அதிகாரியின் கூற்றுப்படி, டெல்லி மருத்துவமனையில் சனிக்கிழமை மொத்தம் 95 சுகாதார பணியாளர்களுக்கு COVID-19 தடுப்பூசி (Vaccine) வழங்கப்பட்டது.
ALSO READ: கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID தடுப்பூசி போடத்தடை விதித்து அரசு உத்தரவு!
டெல்லியில் 4,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
தேசிய தலைநகர் டெல்லியில் (Delhi) தடுப்பூசிக்கான இலக்கு 8,117 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று மொத்தம் 4,319 சுகாதார ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது. நகரில் 81 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
டெல்லியில் தடுபூசியால் ஒருவருக்கு அதிக அளவிலான எதிர்வினைகளும், 51 பேருக்கு தடிப்புகள், ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் அல்லது காய்ச்சல் போன்ற லேசான எதிர்வினை அறிகுறிகளும் தென்பட்டன. டெல்லியில் COVID-19 தடுப்பூசிக்கு பிந்தைய மொத்த பாதகமான நிகழ்வுகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. அவற்றில் ஒன்று மட்டுமே கடுமையான எதிர்வினையாக இருந்தது என்று தில்லி அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குறைந்தபட்சம் 1,91,181 சுகாதாரப் பணியாளர்கள் நேற்று COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். இது தொற்றின் முடிவின் ஆரம்பமாக இருக்கக்கூடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,006 அமர்வு தளங்களில் இது தொடங்கியது.
கோவாக்சின் பக்க விளைவுகளை ஏற்படுத்தினால் பாரத் பயோடெக் இழப்பீடு வழங்கும் என உறுதி
55 லட்சம் கோவாக்சின் (Covaxin) டோஸ் வழங்குவதற்காக மத்திய அரசிடமிருந்து கொள்முதல் ஆணையைப் பெற்றுள்ள பாரத் பயோடெக், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இதனால் ஏதேனும் பாதகமான விளையுகள் ஏற்பட்டால், நிறுவனம் இதற்கான இழப்பீட்டை வழங்கும் என தெரிவித்துள்ளது.
"ஏதேனும் பாதகமான பின்விளையுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் உங்களுக்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும். இந்த விளைவுகள் தடுப்பூசியுடன் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இதற்கான இழப்பீடு ஸ்பான்சர் (பிபிஐஎல்) மூலம் செலுத்தப்படும்” என்று பாரத் பயோடெக் தனது ஒப்புதல் படிவத்தில் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ கூறியுள்ளது.
ALSO READ: உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட WHO!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR