JNU வன்முறைக்கு காவல்துறை ஆணையர் தான் பொறுப்பேற்க வேண்டும் -சிதம்பரம்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிதுறை அமைச்சருமான பி.சிதம்பரம் திங்களன்று செய்தியாளர் சந்திப்பில் JNU வன்முறையை கண்டித்து, இந்நிகழ்விற்காக காவல்துறை ஆணையரை குற்றம் சாட்டினார். 

Last Updated : Jan 6, 2020, 05:06 PM IST
JNU வன்முறைக்கு காவல்துறை ஆணையர் தான் பொறுப்பேற்க வேண்டும் -சிதம்பரம்! title=

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிதுறை அமைச்சருமான பி.சிதம்பரம் திங்களன்று செய்தியாளர் சந்திப்பில் JNU வன்முறையை கண்டித்து, இந்நிகழ்விற்காக காவல்துறை ஆணையரை குற்றம் சாட்டினார். 

JNU விவகாரம் தொடர்பாக மோடி அரசாங்கத்தைத் தாக்கிய அவர், ​​இந்த வழக்கில் டெல்லி காவல்துறை ஆணையரை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பொறுப்புக்கூறல் காவல் ஆணையாளரிடமிருந்து தொடங்குகிறது என்றும் அது உள்துறை அமைச்சரிடம் செல்கிறது என்றும் அவர் கூறினார்.
 
நாம் அராஜகத்தை நோக்கி வேகமாக செல்கிறோம் என்று சொல்கிறார்கள். நாம் விரைவாக அராஜகத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கு JNU வன்முறை மிகப்பெரிய சான்று. அதே நேரத்தில், மத்திய அரசு, உள்துறை அமைச்சர், LG மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோரின் மேற்பார்வையில், இந்த சம்பவம் தேசிய தலைநகரில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதனுடன், அதிகாரிகள் மீது பொறுப்புக்கூறலை சரிசெய்வதன் மூலமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பொறுப்புக்கூறலும் வன்முறை சம்பத்தில் இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளவர்கள் ABVP-யை சேர்ந்த மாணவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டது இடது சாரிகள், காங்கிரஸ் கட்சியினர் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் JNU வன்முறை தொடர்ந்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் JNU வன்முறைக்கு எதிராக நாடுமுழுவதும் வெடித்த போராட்டங்கள் ஓய்ந்தபாடு இல்லை. குறிப்பாக தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றது.

Trending News