வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவுசெய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு செட்ரலில் இருந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்!
கடந்த ஆண்டில் பிரதமர் மோடிக்கு எதிராக, பகிரங்கமாக எழுப்பப்பட்ட குரல்களில் ஒன்று நடிகர் பிரகாஷ் ராஜ்-ன் குரல், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிட்டு வந்த அவர், தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ஜக அரசை மிக கடுமையாக விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. எனினும் எந்த கட்சியாலும் பிரகாஷ்ராஜை தங்கள் பக்கம் ஈர்க்க முடியவில்லை.
#2019 PARLIAMENT ELECTIONS.Thank you for the warm n encouraging response to my new journey.. I will be contesting from BENGALURU CENTRAL constituency #KARNATAKA as an INDEPENDENT..will share the Details with the media in few days..#citizensvoice #justasking in parliament too... pic.twitter.com/wJN4WaHlZP
— Prakash Raj (@prakashraaj) January 5, 2019
இதற்கிடையில் தமிழகத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களுது கட்சி, மன்றங்களுடன் அரசியல் களத்தில் குதித்து விட்டனர். இந்நிலையில் நடிகர் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரன பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் உள்ள முக்கிய தொகுதி ஒன்றில் இருந்து அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் பெங்களூரு சென்ட்ரல் பகுதியில் இருந்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரு சென்ட்ரலை பொறுத்தவரையில்., காந்தி நகர், சார்ஜபெட், சர்வங்கநகரா, சாந்தி நகர், ராஜாஜி நகர், CV ராமன் நகர், சிவாஜி நகர் மற்றும் மஹாதேவ்புரா ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. இதில் எந்த தொகியில் இருந்து ராஜ் போட்டியிடுவார் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுயோட்டை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, தனித்து வெற்றிப்பெற்றார். இவர் தொடர்ந்து பாஜக-விற்கு எதிரான முழக்கங்களை பகிரங்கமாக வைத்து வருபவர். இவருக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினரில் ஆதரவு இத்தொகியில் உள்ளது. இந்நிலையில் தற்போது பிரகாஷ் ராஜும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.