உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது - ஜனாதிபதி முர்மு

President Droupathi Murmu Speech: இந்தியாவின் வளர்ச்சிக்காக பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கின்றனர் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 09:12 PM IST
  • சர்வதேச மன்றங்களின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது - ஜனாதிபதி
  • இந்திய குடிமகன் அனைவருக்கும் சம வாய்ப்பு, உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன - ஜனாதிபதி
  • பெண்கள் தங்களின் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் - ஜனாதிபதி
உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது - ஜனாதிபதி முர்மு title=

Indenpendence Day 2023: இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில், பேசிய அவர் இந்தியாவின் மகள்களான பெண்கள் தங்களின் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எல்லா சவால்களையும் எதிர்கொள்வதையும் அவர் விரும்புவதாகவும் கூறினார். 

மேலும் பேசிய அவர்,"ஒவ்வொரு இந்தியனும் சமமான குடிமகன் ஆவார். இந்த மண்ணில் ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு, உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன" என்று அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவத்திற்கான உரிமையையும் குடியரசு தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியக் குடிமக்கள் என்ற அவர்களின் அடையாளங்கள் சாதி, மதம் மற்றும் மொழியின் மற்ற எல்லா அடையாளங்களையும் தாண்டியது" என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரண்டாவது உரையில் கூறினார். 

பெண் வளர்ச்சி

அதில் அவர்,"இன்று, பெண்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் சேவையின் அனைத்து துறைகளிலும் விரிவான பங்களிப்பை அளித்து தேசத்தின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் அவர்களின் பங்கேற்பு குறித்து கற்பனை செய்ய முடியாத பல துறைகளிலும் இன்று நமது பெண்கள் சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | பெண்ணுக்கு சாலையோரத்தில் பிரசவம்.. ஆளுநர் மாளிகை அருகே இந்தக் கொடுமையா!

நமது நாட்டில் பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார வலுவூட்டல் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை பலப்படுத்துகிறது" என்றார். மேலும், அவர் சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசப்-அலி, சுசேதா கிரிப்லானி போன்ற தலைவர்களை உதாரணம் காட்டி பேசினார். 

உலக அரங்கில் இந்தியா...

உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், உலக ஒழுங்கில் அதன் நிலையை மேம்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது சர்வதேச மன்றங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளது, குறிப்பாக ஜி-20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது. 

இந்தியாவின் ஜி 20 அமைப்பின் தலைமை பதவியில் பெற்றிருப்பதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த இராஜதந்திர நடவடிக்கை அடிமட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விதம் ஆகும். மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் முதன்முதலில் ஒரு வகையான பிரச்சாரம் உள்ளது. அனைத்து குடிமக்களும் இது தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக உள்ளனர்," என்று அவர் கூறினார்.

"உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவத்துடன், உறுப்பு நாடுகள் இந்த முனைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று குடியரசு தலைவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | சிம்லாவுக்கு அருகில் மேகவெடிப்பு! கனமழைக்கு 7 பேர் பலி! மாநில அரசு எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News