கான்பூர் 'Agriexpo 2018'-வை துவங்கி வைக்கிறார் குடியரசு தலைவர்!

சந்திரசேகர் ஆசாத் (CSA) வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாளை(பிப்.,14) முதல் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு - 'அக்ரிகான் 2018' மற்றும் 'அக்ரிஎக்ஸ்போ 2018' ஆகியவற்றில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொள்கிறார்!

PTI | Updated: Feb 13, 2018, 09:30 PM IST
கான்பூர் 'Agriexpo 2018'-வை துவங்கி வைக்கிறார் குடியரசு தலைவர்!

கான்பூர்: சந்திரசேகர் ஆசாத் (CSA) வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாளை(பிப்.,14) முதல் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு - 'அக்ரிகான் 2018' மற்றும் 'அக்ரிஎக்ஸ்போ 2018' ஆகியவற்றில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொள்கிறார்!

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது... பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 10.50 மணிக்கு ஜனாதிபதி சி.எஸ்.ஏ. பல்கலைக்கழகத்தில் சென்றடைகிறார். பின்னர் CSA பல்கலைக்கழக கைலாஷ் பவன் ஆடிட்டோரியத்தில் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைக்கின்றார். ஜனாதிபதி ரம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கும் மூன்று நாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டாக்டர் ஏ.கே. திரிபாதி தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை சுமார் 350 ஆராய்ச்சி ஆவணங்கள் கருத்தரங்கிற்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இவ்விழா குறித்து துணைத் குடியரசு தலைவர் எம். வெங்கையா நாயுடுவின் அர்களின் செய்தியைப் பெற்றுள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந், மாநாடு நடைபெறவுள்ள கான்பூர் தேய்த் மாவட்டத்தில் உள்ள பாரூக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!