நாட்டை பிளவுப்படுத்திய ஆளும் கட்சி - பிரியங்கா காந்தி!

தியாகி என தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் திருடனை கட்டிப்பிடிக்கும் தைரியம் ராகுல் காந்திக்கே உள்ளது என அவரது சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 20, 2019, 03:38 PM IST
நாட்டை பிளவுப்படுத்திய ஆளும் கட்சி - பிரியங்கா காந்தி! title=

தியாகி என தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் திருடனை கட்டிப்பிடிக்கும் தைரியம் ராகுல் காந்திக்கே உள்ளது என அவரது சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேராள மாநிலம் வயநாட்டில் இன்று உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே விஷயம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியது என்று குற்றம்சாட்டினார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்துவிட்டனர்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகளை அளித்திருந்த அவர்கள் எல்ல வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.

அதிகாரம் மக்களுக்கானது அல்ல, ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.

நான் பிறந்த நாளில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார்

Trending News