இளைஞர்களே போலி தேச பக்தர்களை அடையாளம் காணுங்கள் - ப்ரியங்கா காந்தி ஆவேசம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்கள் குறித்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 19, 2022, 07:28 PM IST
  • அக்னிபாத் போராட்டத்தில் கலந்துகொண்ட ப்ரியங்கா காந்தி
  • டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது
இளைஞர்களே போலி தேச பக்தர்களை அடையாளம் காணுங்கள் - ப்ரியங்கா காந்தி ஆவேசம் title=

மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆரம்பத்தில் பிஹாரில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்கிறது மத்திய அரசு. இந்நிலையில்,  அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது பேசிய ப்ரியங்கா காந்தி, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களையும், நமது ராணுவத்தையும் ஒட்டுமொத்தமாக அழிக்கும். இதுவரை தேச பக்தர்களாகவும், தேசியவாதிகளாகவும் வேஷம் போட்டு வந்தவர்களின் முகமூடிகள் அனைத்தும் இன்று கிழிந்துவிட்டன. போலி தேச பக்தர்களையும், தேசியவாதிகளையும் இனியாவது இளைஞர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இளைஞர்களைவிட சிறந்த தேச பக்தர்கள் யாரும் இல்லை. இந்தப் போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், இந்த நாடும் துணையாக நிற்கிறது. எனவே நீங்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராட்டம் நடத்துங்கள். 

 

நாட்டையே சீரழிக்கும் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிவதே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையான தேச பக்தியை காட்டுகிற, இளைஞர்களின் வாழ்க்கையை  முன்னேற்றும் அரசாங்கத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | அக்னி வீரர்களுக்கு வாட்ச்மேன், முடித்திருத்தும் வேலை - பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News