காதலெனும் தேர்வெழுதலாம்..காதலிக்காக தேர்வெழுதலாமா? வசமாக சிக்கிய வாலிபர்..!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலிக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 15, 2024, 05:15 PM IST
  • பஞ்சாப்பை சேர்ந்த இளைஞர் தனது காதலிக்காக தேர்வெழுதியுள்ளார்.
  • இவர் சிக்கியது எப்படி?
  • இதோ முழு விவரம்!
காதலெனும் தேர்வெழுதலாம்..காதலிக்காக தேர்வெழுதலாமா? வசமாக சிக்கிய வாலிபர்..! title=

உண்மையாக காதலிப்பவர்கள் தங்களது காதலுக்காகவும் காதலிக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை பலரும் அறிவர். ஆனால், அப்படிப்பட்ட சிலரை இந்த காலத்தில் பார்ப்பதே அரிதாக இருப்பதாக பலர் அங்கலாய்த்து கொள்வர். ஆனால், அப்படி பேசுபவர்களை வாயடைக்க வைத்திருக்கிறது, ஒரு இளைஞரின் செயல். அவர் அப்படி என்ன செய்தார்? இங்கு பார்ப்போம். 

காதலி போல வேடமிட்ட இளைஞர்..

ஜனவரி 7ஆம் தேதியன்றி, மருத்துவ பணியாளர்களுக்கான தேர்வினை, பாபா ஃபாரித் பல்கலகக்கழகம் கோட்காப்புராவில் உள்ள டிஏவி பொது பள்ளியில் நடத்தினர். ஃபசிலிக்க என்ற பகுதியை சேர்ந்த ஆங்ரீஸ் சிங் என்ற இளைஞர் இளைஞர் இந்த தேர்வை, தனது காதலி பரம்ஜித் கௌரை போல வேடமிட்டுக்கொண்டு தேர்வெழுத வந்திருக்கிறார். கையில் சிகப்பு கண்ணாடி வளையல்கள், நெற்றியில் பெரிய பொட்டு, சிகப்பு உதட்டுச்சாயம், பெண்கள் உடுத்தும் உடை என அனைத்தையும் போட்டுக்கொண்டு பெண் வேடமிட்டு அவர் அந்த தேர்வை எழுத வந்திருக்கிறார். வேடம் மட்டுமா, அதற்கு ஏற்ற ஐடி கார்டையும் எடுத்து வந்திருக்கிறார். 

வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்..

இளைஞர், இவ்வாறு வேடமிட்டு வந்ததை மனிதர்களின் கண்கள் கண்டு காெண்டதோ இல்லையோ, சென்சார்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. இது தெரிந்தவுடன் இவர் ஆள்மாறாட்டம் செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். இந்த சம்பவம், சில மணி நேரத்திற்கு டென்ஷனான தேர்வு அறையை நகைச்சுவையானதாக மாற்றியுள்ளது. 

மேலும் படிக்க | “தாலாட்டுப்பாடி கொலை செய்தேன்” பெங்களூரு தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்!

போலீஸார் விசாரணை:

காவல் அதிகாரிகள் இதுகுறித்து பேசுகையில், அங்கிரீஸ் சிங் தனது காதலி பரம்ஜித் கௌர் போல பொய்யான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்தையும் தயாரித்துள்ளார். இந்த அடையாள அட்டைகள் பொய் என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், இதை கடந்து போய் தேர்வை எழுதி விடலாம் என நினைத்த அவர், கை ரேகை சென்சார் மூலம் மாட்டிக்கொண்டார். இந்த பையோமெட்ரிக் டிவைசில் இவர் கை வைத்தவுடன் தேர்வு எழுத வந்த நபர் இவரில்லை என்பதை அது காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறினாார்கள். உண்மையான தேர்வாளரான பரம்ஜித் கௌர் இந்த முறை தேர்வு எழுத முடியாமல் போயுள்ளதாகவும், ஆங்க்ரீஸ் சிங் மீது வழ்ழகு பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஒரே கல்லில் 2 மாங்காய்! கடத்தலுக்கும் கல்தா! வேலைவாய்ப்பும் காரண்டி! ராணுவத்தின் ஐடியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News