நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறோம் என ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு கூட்டாக பேட்டி...
தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றாக இணைகிறோம். பழைய கசப்புகளை மறந்து தற்போது ஜனநாயக கட்டாயத்தின் பேரில் ஒன்றினைகிறோம். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும்" என்று சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தார். மேலும், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதல் நோக்கம்; அதற்கான சந்திப்புதான் நடைபெற்றது. எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளேன்.
Delhi: Andhra Pradesh Chief Minister, N. Chandrababu Naidu, TDP MPs Jayadev Galla, CM Ramesh and others meet Congress President Rahul Gandhi pic.twitter.com/oST28MdNg0
— ANI (@ANI) November 1, 2018
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ் என எதிரணி பிரிந்து நின்றதால் ஓட்டுகள் சிதறும் என பாஜக கணித்த நிலையில், தற்போது காங்கிரஸ் - தெலுங்கு தேசம் ஒன்றிணைந்துள்ளது பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.