பொருளாதார குழப்பத்தின் யதார்த்தத்தை எந்த நிகல்வாலும் மறைக்க முடியாது: ராகுல்

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்!!

Last Updated : Sep 21, 2019, 09:14 AM IST
பொருளாதார குழப்பத்தின் யதார்த்தத்தை எந்த நிகல்வாலும் மறைக்க முடியாது: ராகுல் title=

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்!!

கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழு கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஓட்டல் அறை கட்டங்களுக்கு  விதிக்கப்படும் வரியை குறைத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

அதன்படி, ஓர் இரவு தங்க 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், 1001 - 7,500 வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, இதுவரை வசூலிக்கப்பட்ட, 18 சதவீத வரி, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 7,500க்கு மேல் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 28லிருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும், ஓட்டல் அதிபர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுமார் ரூ.1½ லட்சம் கோடி அளவுக்கு பெருநிறுவனங்களுக்கான வரிகளை குறைத்து எடுத்த நடவடிக்கை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “பங்குச்சந்தையை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடியின் 'ஹவ்டி, மோடி' நிகழ்ச்சியையொட்டி இப்படியெல்லாம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவது வியப்பு அளிக்கிறது. ஹூஸ்டன் நிகழ்ச்சிக்காக ரூ.1.4 லட்சம் கோடி ... இதுதான் இதுவரை உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சி. மோடி நலமா நிகழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது” என கூறி உள்ளார். 

 

Trending News