கருப்பு பணத்தை ஒழித்துவிட்டீர்களா? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

கருப்பு பணம் வெள்ளையாகி, பா.ஜ.கவுக்கு கிடைத்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 10, 2022, 08:59 PM IST
  • உத்தரக்காண்ட் மாநிலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்
  • பிரதமர் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டு
  • கருப்பு பணத்தை ஒழித்துவிட்டீர்களா? என கேள்வி
கருப்பு பணத்தை ஒழித்துவிட்டீர்களா? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி title=

உத்தரக்காண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மோடி பிரதமர் அல்ல, ராஜா போல் செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார். பிரதமரின் திமிரைப் பார்த்து தனக்கு சிரிப்பு வருவதாக தெரிவித்த ராகுல்காந்தி, கடந்த 70 ஆண்டுகளில் எந்த பணியையும் செய்யவில்லை, தான் வந்த பிறகுதான் நாடு விழித்துள்ளது என நினைத்துக் கொண்டிருக்கிறார் என சாடினார்.

மேலும் படிக்க | பாஜக-வில் இணைந்த WWE கிரேட் காளி..!

தொடர்ந்து பேசிய அவர், "மோடி ஆட்சியின் கீழ் இந்தியா இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என பிரித்துவிட்டார். பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி போன்ற முடிவுகளை அமல்படுத்தி சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை மோடி சீரழித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா?. இந்தக் கறுப்புப் பணம் வெள்ளையாகி, பா.ஜ.க.வுக்கு கிடைத்துவிட்டது

மோடி அரசின் தவறான கொள்கைகளால் நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது. கொரோனாவை சமாளிக்க மோடி அரசு தவறிவிட்டது. மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களை கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டபோது, மொபைல் போன்களை ஒளிரச் செய்யுமாறு மோடி கேட்டுக்கொண்டார். குழந்தைகளுக்கும், முதியோருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படும்போது மோடி அரசாங்கம் எங்கே சென்றது?. 

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு, வேலைவாய்ப்பு உள்ளவர்களையும் பறித்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது 10 ஆண்டு கால ஆட்சியில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளில் 23 கோடி மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது" என சரமாரியாக சாடினார்.

மேலும் படிக்க | பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் எதை அணிவது என்பது பெண்களின் உரிமை: பிரியங்கா காந்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News