ராஜ்யசபா 12 மணி வரை ஒத்திவைப்பு; CAA, NRC-க்கு எதிராக முழக்கம்

சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பிய கோஷத்தை அடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2020, 11:51 AM IST
ராஜ்யசபா 12 மணி வரை ஒத்திவைப்பு; CAA, NRC-க்கு எதிராக முழக்கம் title=

புது டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கியது. இதன் பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற நடவடிக்கைகளின் முதல் நாள் இன்று. இரண்டு அவைகளிலும் கூச்சல், குழப்பம், கோஷம் ஆரம்பம்.

குறிப்பிடத்தக்க வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று மிக நீண்ட பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் 2 மணி 40 நிமிடங்கள் பேசினார். இன்று இரு அவைகளின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் தொடங்கப்பட்டன. முதலில் மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா சிஏஏவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிகை வைத்தார். அதேபோல மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து CAA-வை திரும்ப பெறுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பினர். 

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், "துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள், நாட்டை உடைப்பதை நிறுத்துங்கள்'" என்ற முழக்கங்களை எழுப்பினர். மக்களவையில் கேள்வி நேர நடவடிக்கைகளின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்புகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "மோடி சர்க்கார் ஜவாப், ஜவாப் ஜவாப் ஜவாப்... மோடி சர்க்கார் ஜவாப், ஜவாப் ஜவாப் ஜவாப்... (மோடி அரசு பதில் அளியுங்கள்) போன்ற கோஷங்களை சி.ஏ.ஏ. தொடர்பாக எழுப்புகின்றனர். 

மக்களவை சபாநாயகர் அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "நீங்கள் தலைவர்கள் அனைவரும் கேள்வி நேரத்தை இயக்க அனுமதிப்பீர்கள்" என்று சொன்னார்கள். உங்கள் கோரிக்கையை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பவும், ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமைதியாக இருக்கவில்லை, கோஷங்கள் தொடர்ந்து எழுப்பி வண்ணம் இருந்தனர். 

அதற்கு மக்களவை சபாநாயகர் நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து கேள்விகள் கேட்கும் போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்றார்.

அதேபோல சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பிய கோஷத்தை அடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News