FB, WhatsApp-யை BJP கட்டுப்படுத்துகிறது என்ற ராகுலின் கருத்துக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!

FB, WhatsApp-யை BJP மற்றும் RSS கட்டுப்படுத்துவதாக ராகுல் கூறியிருந்த நிலையில், 'தோல்வியுற்றவர்களின் கூச்சல் அது' என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி..!

Last Updated : Aug 17, 2020, 10:07 AM IST
FB, WhatsApp-யை BJP கட்டுப்படுத்துகிறது என்ற ராகுலின் கருத்துக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி! title=

FB, WhatsApp-யை BJP மற்றும் RSS கட்டுப்படுத்துவதாக ராகுல் கூறியிருந்த நிலையில், 'தோல்வியுற்றவர்களின் கூச்சல் அது' என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி..!

இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் RSS, BJP கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது 'தோல்வியுற்றவர்களின் கூச்சல் அது' என பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இந்தியாவில் FB, WhatsApp உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் RSS மற்றும் BJP கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் மூலம் வாக்காளர்களை கவருவதற்காக வெறுக்கத்தக, போலி செய்திகள் பகிரப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர், அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் வெளியான கட்டுரையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையடுத்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத தலைவர், உலகம் முழுவதும் BJP, RSS கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். 

ALSO READ | Indian Railway: ரயில் பயணத்தில் ஏதேனும் சிக்கலா, அப்போ இங்கே புகார் செய்யுங்கள்...!

தேர்தலுக்கு முன்பே, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, பேஸ்புக்கை பயன்படுத்தி தகவல்களை பெற்ற விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா?. இன்று தகவல் மற்றும் கருத்து சுதந்திரத்தை அணுகுவது ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே தான் வலிக்கிறது. பெங்களூரு கலவரம் குறித்து இதுவரை உங்க கண்டனம் வரவில்லை. எங்கே போனது உங்கள் தைரியம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News