ஆர்.பி.ஐ. துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தனது பதவிக்காலம் முடிவடைய 6 மாத காலம் இருக்கின்ற நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா..!
விரால் ஆச்சார்யா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக 2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பதவி பதவியேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் ஒருவராக ஆச்சார்யா இணைந்தார்.
இந்நிலையில், விரால் ஆச்சார்யாவின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக விரல் ஆச்சர்யா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Reserve Bank of India (RBI) Deputy Governor, Viral Acharya has resigned six months before the scheduled end of his term. He had joined RBI in 2017. (file pic) pic.twitter.com/RyxAt6fmAN
— ANI (@ANI) June 24, 2019
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தனிப்பட்ட சொந்த காரணத்தினாலேயேதான் ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். இதனிடையே மத்திய அரசு ரிசா்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியில்லை என ஆச்சாா்யா முதல் முறையாக பொதுமேடை ஒன்றில் கூறியிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.