கனமழை காரணமாக கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது!
அதேவேளையில் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.
கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும். தமிழகத்தில் கனமழை வாய்ப்பு இல்லை எனவும், தென்மேற்கு மத்திய அரபிக் கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் கேரளாவில் பருவ மழை படிபடியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.