திருமண விழாவில் மணமகன் மீது உறவினர்கள் பண மழையை போலியா வைத்த சம்பவம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது!
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், குஜராத்தில் ஒரு திருமண விழாவில் மணமகன் மீது உறவினர்கள் பணத்தை அள்ளி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் நவஸ்ரீயில் கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளையின் உறவினர்கள் பண மழை பொழியச் செய்துள்ளனர்.திருமணத்தை ஒட்டி பசுமாடுகளை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது பணம் குவியல் குவியலாக கொட்டிக் கிடந்தது. பக்தி பாடல்களைப் பாடிய பாடகர் கீர்த்திதன் காட்வியின் மீது (500 மற்றும் 100) ரூபாய் தாள்களுடன் பண மழை பொழிந்தது.
Navsari: A 'bhajan' programme was organised at a wedding and signer Kirtidan Gadhvi was invited to sing to raise fund for cow protection yesterday and notes were showered on the groom. #Gujarat pic.twitter.com/ar9G1zvxvm
— ANI (@ANI) February 7, 2019