Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோ

Retirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2024, 04:28 PM IST
  • ஓய்வூதிய கார்பஸ் என்றால் என்ன?
  • அதன் அளவை எப்படி தீர்மானிப்பது?
  • உங்கள் ஓய்வூதிய கார்பஸ் என்னவாக இருக்க வேண்டும்?
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோ

Retirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம். ஓய்வூதிய கார்பஸ் என்றால் என்ன? அதன் அளவை எப்படி தீர்மானிப்பது? உங்கள் ஓய்வூதிய கார்பஸ் என்னவாக இருக்க வேண்டும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

ஓய்வூதிய வயதிற்கு பிறகு, மாத வருமானத்தை நம்பி இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஓய்வூதிய கார்பஸிலிருந்து வரும் உங்களின் பேசிவ் வருமானத்தின் மூலம்தான் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனினும், பணி ஓய்வுக்கான நேரம் என்பது நபருக்கு நபர் மாறுபடலாம். 

பணி ஓய்வுக்கு பிறகு இருக்கும் தனிப்பட்ட பொறுப்புகள், பிற செலவுகள் ஆகியவை ஓய்வூதிய கார்பஸை தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாக உள்ளன. முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அந்த இலக்கை அடைவதற்கான மாதாந்திர முதலீடு ஆகியவை ஓய்வூதிய கார்பஸ் இலக்கை அடைய மற்ற இரண்டு காரணிகளாக பார்க்கப்படுகின்றன. 

Systematic Investment Plan 

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் ஒருவர் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.20,000 மிமுதலீடு செய்தால், ஓய்வூதிய கார்பஸ் இலக்கான ரூ.14 கோடியை அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். மேலும், ஒரு நபர் தனது பணி ஓய்வு திட்டமிடலை 25 வயதில் தொடங்கினால், எத்தனை ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு 25 வயது நபரின் முதலீட்டு பயணத்தை இங்கே காணலாம்:
- மாதாந்திர SIP முதலீடு 20,000 ரூபாயாக இருக்கும்.

- 12 சதவிகிதம், 13 சதவிகிதம், 14 சதவிகிதம் மற்றும் 15 சதவிகிதம் ஆகிய வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

- மியூச்சுவல் ஃபண்ட் SIP -ஐத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில், இந்த வகையான வருமானம் அந்த முதலீட்டில்தான் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | POMIS: மாதம் ரூ.9250 வருமானம் கொடுக்கும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்

20,000 மாதாந்திர SIP இல், 14 கோடி கார்பஸை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (12% வருமானத்தில்) 

- இந்த இலக்கை அடைய சுமார் 36 ஆண்டுகள் ஆகும்.

- 36 ஆண்டுகளில் முதலீடு ரூ. 86,40,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 13,79,96,822 ஆகவும், எதிர்பார்க்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.14,66,36,822 ஆகவும் இருக்கும்.

ரூ.20,000 மாதாந்திர SIP இல் ரூ.14 கோடி கார்பஸை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (13% வருமானத்தில்)

- ஓய்வூதிய கார்பஸ் இலக்கான 14 கோடியை அடைய தோராயமாக 34 ஆண்டுகள் ஆகும்.

- 34 ஆண்டுகளில் முதலீடு ரூ. 81,60,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 14,14,01,715 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதியத் தொகை ரூ.14,95,61,715 ஆகவும் இருக்கும்.

ரூ.20,000 மாதாந்திர SIP இல் ரூ.14 கோடி கார்பஸை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (14% வருமானத்தில்) 

- இந்த ஓய்வூதிய கார்பஸ் இலக்கை அடைய சுமார் 32 ஆண்டுகள் ஆகும்.

- அந்த ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.76,80,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.13,96,92,659 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.14,73,72,659 ஆகவும் இருக்கும்.

ரூ. 20,000 மாதாந்திர SIP இல் ரூ.14 கோடி கார்பஸை அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (15% வருமானத்தில்)

- இந்த நிதி இலக்கை அடைய தோராயமாக 30 ஆண்டுகள் ஆகும்.

- 30 ஆண்டுகளில் முதலீடு ரூ. 72,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 13,29,96,412 ஆகவும், ஓய்வூதியத் தொகை ரூ. 14,01,96,412 ஆகவும் இருக்கும்.

14 கோடி ஓய்வூதிய கார்பசை (12% வருமானத்தில்) எந்த வயதில் சேர்க்க முடியும்?

25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர் 61 வயதிற்குள் அந்த இலக்கை அடைய முடியும்.

14 கோடி ஓய்வூதிய கார்பசை (13% வருமானத்தில்) எந்த வயதில் சேர்க்க முடியும்?
25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர் 59 வயதிற்குள் இந்த நிதி இலக்கை அடைய முடியும்.

14 கோடி ஓய்வூதிய கார்பசை (14% வருமானத்தில்) எந்த வயதில் சேர்க்க முடியும்?
25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர் 57 வயதிற்குள் ரூ.14 கோடி ஓய்வூதிய இலக்கை எட்ட முடியும்.

14 கோடி ஓய்வூதிய கார்பசை (15% வருமானத்தில்) எந்த வயதில் சேர்க்க முடியும்?
25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர் 55 வயதிற்குள் இலக்கை அடைய முடியும்.

மேலும் படிக்க | ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News