புதுடெல்லி: அன்றாடம் சாலைகளில் பல விபத்துகள் (Road Accidents) நடந்து வருவதைக் காண்கிறோம். ஆனால், பல சமயங்களில் யாரும் அடிபட்டவருக்கு உதவ முன்வருவதலில்லை. இதற்குக் காரணம், இதுபோன்ற வழக்குகளில் உதவி செய்பவர்கள், பின்னர் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைய வேண்டி இருக்கின்றது. ஆனால் இப்போது, நல்ல உள்ளம் படைத்தும் இப்படிப்பட்ட காரணங்களால் உதவத் தயங்கும் நபர்களுக்காக, அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகளை உருவாக்கியுள்ளது. இதனால் இனி விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு உதவுபவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்.
பெயர், அடையாளம், முகவரி அல்லது அத்தகைய தனிப்பட்ட விவரங்களை வெளியிட எந்த ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது வேறு எந்த நபரோ யாரையும் இனி கட்டாயப்பப்படுத்த முடியாது.
ALSO READ: வீட்டிலிருந்தே இனி ரயில்களில் சரக்குகளை அனுப்பலாம்: உதவ வருகிறது FBD Portal!!
விபத்துகளின் போது உதவும் மக்களின் பாதுகாப்பிற்கான விதிகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019-ல் (Motor Vehicles Amendment Act 2019) நல்ல குடிமகன் பாதுகாப்பு, என்ற ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய விதிப்படி, சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை இனி யாரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த கட்டாயப்படுத்த முடியாது.
அவர்கள் மதம், தேசியம், சாதி அல்லது பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இன்றி மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.
ஒவ்வொரு பொது மற்றும் தனியார் மருத்துவமனையும் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில், நுழைவு வாயில் அல்லது பிற குறிப்பிட்ட இடத்திலும் மற்றும் அதன் இணையதளத்தில் இதற்கான ஒரு சாசனத்தை வெளியிடும்.
ALSO READ: ரயிலில் பயணிக்க தயாராக இருங்கள், 200 புதிய சிறப்பு ரயில்களை இயக்கப் போகிறது ரயில்வே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR