ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை பல தலைவர்கள் வரவேற்று உள்ளனர். இதைக்குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
பாசிச படைகளுக்கு பெரிய அடியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைத்துள்ளது. இந்த தீர்ப்பு பாஜகவின் கண்காணிப்பு மூலமான அடக்குமுறையை நிராகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஆதார் எண் கட்டாயம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நடிகர் கமல்ஹாசன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்று மற்றும் பலர் வரவேற்று உள்ளனர்.