இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு அநீதி இழைத்த 3 கேரள போலீஸார் மீது CBI வழக்கு: SC

1992 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில், கிரையோஜனிக் இன்ஞின் தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அமெரிக்காவும், பிரான்ஸும் அளித்த நெருக்குதல் காரணமாக, ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2021, 06:04 PM IST
  • 1992 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில், கிரையோஜனிக் இன்ஞின் தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அமெரிக்காவும், பிரான்ஸும் அளித்த நெருக்குதல் காரணமாக, ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு அநீதி இழைத்த 3 கேரள போலீஸார் மீது CBI வழக்கு: SC title=

நாசாவில் வாய்ப்பு கிடைத்தும், அங்கிருந்து தொழில்நுட்பத்தை மட்டும் கற்றுக் கொண்டு, இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயண், அதன் முன்னேற்றத்திற்காக இரவும் பகலும் உழைத்தார். 

இந்நிலையில், 1992 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில், கிரையோஜனிக் இன்ஞின் தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அமெரிக்காவும், பிரான்ஸும் அளித்த நெருக்குதல் காரணமாக, ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

பின்னர் கையெழுத்தான புதிய ஒப்பந்தப்படி, தொழில்நுட்பத்தை தராமல், நான்கு மாதிரி என்ஞின்களை வழங்கியது.      

இந்த என்ஞின்களுக்கான திரவ எரிபொருளை கண்டறியும் சவால் மிகுந்த பணியில் ஈடுபட்டிருந்த, நம்பி நாராயண் மீது, ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அவர் பாகிஸ்தானுக்கு (Pakistan) தொழில்நுட்பத்தை விற்றார் என்பது தான் அந்த குற்றசாட்டு. 

இதில் சிறையில் சித்தரவதையை அனுபவித்த நம்பி நாராயண், பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  பொய்யாக வழக்கு ஜோடித்ததால், வாழ்க்கையை தொலைத்த நம்பி நாராயணை வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம், கேரள அரசு அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்நிலையில் "விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு இழப்பீடு வழங்க சொல்லி உத்தரவிட்டது. என்றாலும், அவரை கொடுமைப்படுத்தியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. வழக்கு தொடர்கிறது

விஞ்ஞானியான  நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 

அதாவது "விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சொல்லி உத்தரவிட்டாலும், அவரை கொடுமைப்படுத்தியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை."  என குறிப்பிட்டு,  நம்பி நாராயணன் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். 

நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து, நம்பி நாராயணனுக்கு அநீதி இழைக்க காரணமான கேரள காவல்துறையினர் மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

துரோகத்தினால் வீழ்ந்த நம்பி நாராயணனின் பயோபிக் படமான "ராக்கெட்ரி" திரைப்படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 1 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் நம்பி நாராயணாஅக நடிகர் மாதவன் நடித்துள்ளார். டிரெய்லரில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடியை, ராக்கெட்ரி படத்தின் நிஜ நாயகனான விஞ்ஞானி நம்பி நாராயணனுடன், இணைந்து தான் சந்தித்தாக தனது வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்தார் நடிகர் மாதவன். 

ALSO READ | பிரதமரை சந்தித்த 'ராக்கெட்ரி' படத்தின் Real மற்றும் Reel நாயகர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News