கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்: SC!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும்  இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Nov 13, 2019, 11:49 AM IST
    1. கர்நாடகாவில் 17 MLA-க்களின் தகுதி நீக்கம் செல்லும்.
    2. MLA-க்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்.
    3. தகுதி நீக்கத்திற்கு ஆளான MLA-க்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி.
    4. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் MLA-க்கள் 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும்.
    5. தகுதி நீக்கத்திற்கு ஆளானவர்களை தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை செய்தது சட்டவிரோதம்.
    6. நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை MLA-க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு சரியானது இல்லை.
கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்: SC!  title=

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும்  இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!!

டெல்லி: கர்நாடக முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் 17 கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது. எவ்வாறாயினும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத 17 எம்.எல்.ஏ.க்களை, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். 

மேலும், 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட இவர்களுக்குத் தடைவிதித்தும் அவர் உத்தரவிட்டார். 17 பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 105 உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி 14  எம்.எல்.ஏக்கலும் சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 17 பேர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்வீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்ஏக்களும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்  எனவும் தீர்ப்பளித்தனர். 

 

Trending News