சர்தார் வல்லபாய் படேல் சிலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்திற்கு, பிரதமர் மோடி அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!
பிலாஸ்பூர், பஸ்தி, சித்தோர்கர், தன்பாத் மற்றும் மான்சோர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பாஜக ஊழியர்களுடன் இன்று வீடியோ கான்ப்ரஸிங் மூலம் பேசிய மோடி அவர்கள் இது குறித்து தெரிவித்ததாவது.... "கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்து அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினர்... இப்போது இல்லை, கடந்த 70-ஆண்டுகளாகவே படேல் அவர்களை மதித்ததில்லை. அதன் வெளிப்பாடு தான் தற்போது காங்கிரஸ் தலைவர், சர்தார் படேலை சீன ஆடை, அணிகலன்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கின்றார். இந்தியாவின் இரும்பு மனிதரை இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது" என மோடி வன்மையாக சாடியுள்ளார்.
#WATCH: Prime Minister Narendra Modi reacts to Rahul Gandhi's statement, 'Sardar Patel's statue in Gujarat will be world's tallest statue but 'Made In China' like our shoes & shirts' pic.twitter.com/cvZK7EfZ4c
— ANI (@ANI) September 29, 2018
உலகின் மிகப்பெரிய சிலையாக சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலையை குஜராத்தில் அமைக்கப் போவதாக பிரதமர் மோடி முன்னதாக அறிவித்திருந்தார். இதன்படி, பட்டேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர் 31-ஆம் நாள் நர்மதா நதிக்கரையில் அவரது சிலையை நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக... 3000 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த 182 அடி உயரமுடைய சிலையையின் பின்பக்கத்தில் Made in China என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை சுட்டி காட்டிய ராகுல் காந்தி பாஜக-வினை விமர்சித்தார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி இதுகுறித்து பேசுகையில்... "குஜராத்தில் பட்டேலுக்கு மோடி சிலை அமைக்கிறார். இது உலகின் உயரமான சிலை, நல்ல வேலைபாடுடையது. ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பட்டேலை அவமதிக்கும் செயல், சீன இளைஞர்களுக்கு தான் இது வேலைவாய்ப்பை அளித்துள்ளது. சீனவில் தயாரிக்கப்படும் ஆடை அணிகலன்களைப் போல் இந்த சிலையின் தரத்திலும் நம்பிக்கை வைக்க இயலாது" என்று விமர்சித்துள்ளார்.
Dear @RahulGandhi, your family humiliated Sardar Patel, unsuccessfully tried to erase his legacy from the people’s hearts and minds.
Your lies on the ‘Statue of Unity’ is another display of your visceral hatred towards Sardar Patel.
— Amit Shah (@AmitShah) September 27, 2018
முன்னதாக., ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா, தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது... “ ராகுல் காந்தி அவர்களே, உங்களின் குடும்பம் தான் சர்தார் படேலை அவமதித்தது, மக்களின் மனதில் இருந்து அவரது பாரம்பரியத்தை அழிக்க முயன்று தோற்று போனது. "ஒற்றுமைக்கான சிலை" விவகாரத்தில் உங்களின் பொய்,. சர்தார் படேலுக்கு எதிராக நீங்கள் கொண்டுள்ள வன்மத்தை எடுத்துக்காட்டுகிறது" என குறிப்பிட்டிருந்தார்.