ஷரத் பவார் எனது தலைவர்; BJP-NCP கூட்டணி நிலையான அரசாங்கத்தை உருவாக்கும் - அஜித் பவார்!

நான் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன்; என்றும் அந்தக் கட்சியில் தான் இருப்பேன் என அஜித் பவார் ட்வீட்!!

Last Updated : Nov 24, 2019, 07:19 PM IST
ஷரத் பவார் எனது தலைவர்; BJP-NCP கூட்டணி நிலையான அரசாங்கத்தை உருவாக்கும் - அஜித் பவார்! title=

நான் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன்; என்றும் அந்தக் கட்சியில் தான் இருப்பேன் என அஜித் பவார் ட்வீட்!!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தலைவருமான அஜித் பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர்.

தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதனையடுத்து, அஜித் பவாரை கட்சியிலிருந்து நீக்குவதாக சரத்பவார் அறிவித்தார். இதை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நான் தேசியவாத காங்கிரசில் தான் இருப்பதாகவும்; ஷரத் பவார் தான் தனது தலைவர் எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;  நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் அதில் தான் இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும்.

அந்த ஆட்சி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உறுதியாக தீவிரமாக உழைக்கும். இங்கு அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. எல்லாம் சரியாக உள்ளது. எப்படி இருந்தாலும் கொஞ்சம் பொறுமை தேவைப்படுகிறது. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், இதற்கு மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை நாளை 10.30 மணிக்கு மத்திய அரசு சமர்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஆளுநரின் கடிதங்களை நாளை காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. 

Trending News