பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

முந்தைய காங்கிரஸ் அரசின் அட்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலையை தற்போது எங்களால் குறைக்க முடியவில்லை என்று நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 08:35 PM IST
  • பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாததற்கு காரணம் காங்கிரஸ் தான்.
  • எண்ணெய் பத்திரங்கள் காரணமாக மத்திய அரசுக்கு கடன் சுமை ஏற்பட்டது.
  • மக்களின் கவலை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் -நிர்மலா சீதாராமன்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் title=

புது டெல்லி: நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவாசிய பொருட்களின் விலையேற்றமும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. பெட்ரோலின் விலை 100 ரூபாயினை தாண்டி செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையத் தொடங்கினாலும் ஒன்றிய அரசு பெட்ரோலின் விலையை குறைக்க மறுக்கிறது.

இது தவிர மாநில அரசுகளும் கலால் வரியினை ஒன்றிய அரசு குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு இம்மியளவும் விலையை குறைத்தபாடில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்று அது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது, "காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.1.44 லட்சம் கோடியளவில் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதனால் பெட்ரோல், டீசல் விலையை தற்போது எங்களால் குறைக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது எரிபொருள் விலையினைக் குறைக்க 1.44லட்சம் கோடி அளவில் எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டார்கள். அன்று அவர்கள் செய்த தந்திர செயல்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய இயலாது. எண்ணெய் பத்திரங்கள் காரணமாக மத்திய அரசுக்கு கடன் சுமை ஏற்பட்டது. இந்த காரணங்களால் எங்களால் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க முடியாது.

தற்போதைக்கு எரிபொருள் மீதான கலால் வரியினை குறைப்பதற்கு சாத்தியமில்லை கடன் பத்திரத்திற்கு வட்டி செலுத்தி வருவதனால் கடன் சுமை ஏற்படுகிறது‌. 

ALSO READ | பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதனை! ஒரே ஆண்டில் கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 70,195.72 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 2026 வரை நாம் 37,ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. தற்போது 1.30லட்சம் கோடி ரூபாய் வரை கடன் நிலுவையிலுள்ளது.

மக்களின் கவலை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். மத்திய, மாநில அரசுகள் விவாதித்து இதற்கொரு வழியை காணும் வரை நமக்கு தீர்வு இல்லை. எண்ணெய் பத்திரங்களின் கடன்சுமை மட்டும் என்னிடம் இல்லையென்றால் எரிபொருளின் மீது இருக்கும் கலால் வரியை குறைக்க நான் முயற்சித்து இருப்பேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ALSO READ | பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News