COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!!

ஒரு பெரும் திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் இப்போது COVID-19 காற்று வழியாகவும் பரவக்கூடும் என்று கூறியுள்ளனர். இந்த கொடிய வைரஸ் சில மணிநேரங்கள் வரை காற்றில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Last Updated : Oct 6, 2020, 03:22 PM IST
  • COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, 6 அடிக்கு மேல் தொலைவில் இருந்தவர்கள் கூட தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம்-CDC.
  • தொற்றுக்கு ஆளானவர் அந்த இடத்தை விட்டு சென்ற பின்னரும் கூட தொற்று பரவலாம்.
  • காற்றில் நீடிக்கும் ஏரோசோல்கள் கொடிய வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!!  title=

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் நேரடியான தொடர்பு கொண்டாலோ அல்லது தொற்றுள்ள நபர் தொட்ட இடத்தை, பரப்புகளை ஒருவர் தொட்டாலோ அவருக்கு தொற்று எற்படக்கூடும் என்றே இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால், இதில் ஒரு பெரும் திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் இப்போது COVID-19 காற்று வழியாகவும் பரவக்கூடும் என்று கூறியுள்ளனர். இந்த கொடிய வைரஸ் சில மணிநேரங்கள் வரை காற்றில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலையை எழுப்புகிறது.

CDC, அதன் திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், மோசமான காற்றோட்டம் உள்ள இடங்களிலும் முழுவதுமாக மூடப்பட்ட இடங்களுகளிலும், COVID-19 தொற்று உள்ள நபர்களால், 6 அடிக்கு அப்பால் இருந்தவர்களுக்கும் தொற்று பரவி இருக்கக்கூடும் என சமீபத்திய சான்றுகள் காட்டுகின்றன என்று கூறியுள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், CDC, “COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, 6 அடிக்கு மேல் தொலைவில் இருந்தவர்கள் கூட தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதையும் தொற்றுக்கு ஆளானவர் அந்த இடத்தை விட்டு சென்ற பின்னரும் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்பதையும் இன்றைய புதுப்பிப்பு ஒப்புக்கொள்கிறது. இப்படிப்பட்ட அசாதாரண சந்தர்பங்களிலும் தொற்று பரவக்கூடும்.” என்று கூறியுள்ளது.

"இந்த நிகழ்வுகளில், மோசமாக காற்றோட்டம் மற்றும் மூடப்பட்ட இடங்களில் பரவல் நிகழ்ந்துள்ளது. இங்கு பாடல், உடற்பயிற்சி போன்ற கனமான சுவாசத்தை ஏற்படுத்தும் செயல்கள் நடந்துள்ளன. இத்தகைய சூழல்களும் செயல்பாடுகளும் வைரஸ் சுமக்கும் துகள்களை உருவாக்க பங்களிக்கக்கூடும்.”

ALSO READ: கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..!!!

இதன் பொருள் என்னவென்றால், COVID-19 தொற்ரால் பாதிக்கப்பட்ட நோயாளியால் வெளியிடப்படும் நீர்த்துளிகள் அல்லது ஏரோசோல்கள் (Aerosol) தரையில் விழுவதற்கு முன்பு சிறிது நேரம் புகை போன்ற காற்றில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், அந்த நேரத்தில் இந்த காற்றை உள்ளிழுக்கும் எவரும் நோய்த்தொற்றைப் பெறுகிறார்கள். மேலும், COVID-19 நோயாளிகளால் வெளியிடப்படும் இந்த வைரஸ் நிறைந்த ஏரோசோல்களால் அதிக தூரம் (6 அடிக்கு மேல்) பயணிக்க முடியும்.

இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, காற்றில் நீடிக்கும் ஏரோசோல்கள் கொடிய வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற நிலையில், உங்களால் முடிந்தவரை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். மேலும், நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு இருந்தால் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க நீங்கள் உட்புற காற்றை மேம்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, முகக்கவசத்தை (Face Mask) அணிந்து மற்றவர்களிடமிருந்து போதுமான தூரத்தை பராமரிக்க மறக்காதீர்கள்.

ALSO READ: July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News