பாஜக-விற்கு எதிராக மெகா கூட்டணி; டெல்லியில் சிறப்பு கூட்டம்!

பாஜக-விற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக 21 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். 

Last Updated : Dec 10, 2018, 07:37 PM IST
பாஜக-விற்கு எதிராக மெகா கூட்டணி; டெல்லியில் சிறப்பு கூட்டம்! title=

பாஜக-விற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக 21 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். 

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா கலந்து கொண்டார். அதேவேலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சமீபத்தில் சந்தித்து பேசினார். தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். இவர்களை தொடர்ந்த கடந்த நவம்பர் 9-ஆம் நாள் தமிழக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலி அவர்களையும் சந்தித்தார். 

இந்நிலையில் நாளை 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் நாளை கூடுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகளிடயே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இன்று எதிர்கட்சிகள் கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்தார்.

அதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடியது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

ஆளும் பாஜக-விற்கு எதிராக எவ்வாறு தேர்தல் யுக்திகளை கையாளுதல், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிருத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Trending News