நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்தை வேண்டாம் என மாநில Govt கூற முடியாது: பூபேந்திர ஹூடா

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது என காங்கிரஸ் தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபேந்திர சிங் ஹூ டா தெரிவித்துள்ளார்!!

Updated: Jan 20, 2020, 12:24 PM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்தை வேண்டாம் என மாநில Govt கூற முடியாது: பூபேந்திர ஹூடா

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது என காங்கிரஸ் தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபேந்திர சிங் ஹூ டா தெரிவித்துள்ளார்!!

டெல்லி: காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்றவை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவுள்ள நிலையில், பஞ்சாப், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஹரியானா முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா திங்கள்கிழமை (ஜனவரி 20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை வேண்டாம் என எந்த மாநில அரசும் கூற முடியாது என  பூபேந்திர சிங் ஹூ டா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிற நிலையில், CAA சட்ட விரோதமானது எனவும், ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் சி‌ஏ‌ஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேந்திர சிங் ஹூடா, CAA பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறுகையில்.... பாராளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றால் அது சட்டப்பூவமானதாகி விடுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. அதே சமயம் அதை சட்டப்பூர்வ ஆய்வுகளுக்கு உட்படுத்தபடுத்தலாம் என்றார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் CAA எதிர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

CAA பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும், அந்த மாநிலங்களுக்கு இந்த மையத்துடன் உடன்பட உரிமை உண்டு, இது உச்சநீதிமன்றத்தில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை "அரசியலமைப்பற்ற" சட்டத்தை செயல்படுத்த எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பாக, ராஜஸ்தான் பட்ஜெட் அமர்வின் முதல் நாளான ஜனவரி 24 ஆம் தேதி சட்டசபையில் CAA-ஐ அமல்படுத்துவதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.