சர்வதேச பெட்ரோலிய சந்தையின் விலை நிர்ணய நிலவரத்தின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்துவதும், குறைப்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்குட்பட்டதாக உள்ளது.
அதன் அடிப்படையில் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய் 57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.
அதேவேளையில், மானியமல்லாத சிலிண்டர்களின் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்துக்கு பயன்படுத்தும் பெட்ரோலின் விலை 5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.