11:05 08-03-2019
இந்தநிலையில், இன்று காலை மத்தியஸ்தர்கள் நியமிப்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் ஒய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அயோத்தி பிரச்சனை குறித்து சமரசம் செய்யும். நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்திற்க்குள் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களில் முடிக்க வேண்டும்.
மேலும் மூடப்பட்ட அறையில் தான் மத்தியஸ்தர் குழு பேச்சுவாரத்தை நடத்த வேண்டும். அயோத்தி பிரச்சனை குறித்து சமரச பேச்சுவார்த்தை குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
KP Maurya,Dy CM on SC refers Ram Janmabhoomi-Babri Masjid land dispute case for court appointed&monitored mediation:Won't question SC order. In the past,efforts made to arrive at a solution,but with no success. No LordRam devotee or saint wants delay in construction of Ram Mandir pic.twitter.com/aNUy1eqdj1
— ANI UP (@ANINewsUP) 8 மார்ச், 2019
AIMPLB member & convener of Babri Masjid Action Committee Zafaryab Jilani, on SC order on Ram Janmabhoomi-Babri Masjid land dispute case: We have already said that we will cooperate in the mediation. Now, whatever we have to say, we will say it to the mediation panel, not outside pic.twitter.com/sEAcBDPP7z
— ANI (@ANI) 8 மார்ச், 2019
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலாகாபாத் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. நீதிபதி போப்டே விடுப்பில் இருந்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோயி அக்சரா, வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீது 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தரை நியமனம் செய்வது பரிசீலிக்க உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஆனால் மத்தியஸ்தரை நியமிப்புக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேவேலையில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.