வீரமரணமடைந்த இராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி அளித்த முதல்வர் சந்திரசேகர் ராவ்

வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் வீட்டுக்கு சென்ற தெலுங்கானா சந்திரசேகர் ராவ், அவரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 22, 2020, 09:09 PM IST
வீரமரணமடைந்த இராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி அளித்த முதல்வர் சந்திரசேகர் ராவ்
Photo: Zee Media Network

ஹைதராபாத்: கால்வன் பள்ளத்தாக்கு சண்டையில் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த வீரர்களில் கர்னல் சந்தோஷ் பாபு ஒருவராக இருந்தார். இப்போது அவரது தியாகத்திற்குப் பிறகு, அவரது மனைவி தெலுங்கானா அரசாங்கத்தால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (K Chandrashekar Rao) அறிவித்துள்ளார். 

முன்னதாக லடாக்கில் (Ladakh) நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம் அளிக்கப்படும், அவர்களின் குடும்பத்துக்கு ஒரு வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.

READ | வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம்: சிங்

இன்று, வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் (Col Santosh Babu) வீட்டுக்கு சென்ற தெலுங்கானா சந்திரசேகர் ராவ், அவரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார். அதன்பிறகு சந்தோஷின் மனைவி சூர்யாபேட்டை மாவட்ட துணை கலெக்டர் பதவி வகிப்பார் என அறிவித்தார். மேலும் 4 கோடி அவரது மனைவிக்கும், ஒரு கோடி சந்தோஷ் பாபுவின் பெற்றோர்களுக்கும் வழங்கினார். அதுமட்டுமில்லாமல், பெரிய விஐபி வசிக்கும் சூர்யாபேட்டா பகுதியில் 570 கஜம் அளவிலான வீட்டு மனை வழங்கினார்.

தெலுங்கானா அரசாங்கத்தின் (Telangana Govt) இந்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால் நாட்டிற்காக தனது கடமையைச் செய்த தியாகி சந்தோஷ் குடும்பத்தை பாதுகாப்பது, அவருக்கு மரியாதை செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

READ | தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10 லட்சம்!!

ஜூன் 15 அன்று, எல்.ஏ.சி.யில் (LAC) சீனாவுடன் வன்முறை மோதல் ஏற்பட்டது என்பதை நான் நினைவுப்படுத்துகிறோம். இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் மரணமடைந்தனர். கர்னல் சந்தோஷ் பாபு 16 பீகார் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.