ஜம்முவில் இந்து கோவிலில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜுலாஸ் கிராமத்தில் மெஜாரிட்டி இஸ்லாமியர்கள் இந்து கோவிலில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்த இருதரப்பு நகர்வு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர்வாசிகள் தலைமையில் இளைஞர் ஒருவர், கோவில் நிர்வாகம் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தடுக்க வலுக்கட்டாயமாக முயற்சித்து உள்ளார். பின்னர் இருதரப்பை சேர்ந்த மக்களுக்கும் கூடி, ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.