J&K காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டு தாக்குதல்!

காஷ்மீர் அனந்த்நாகில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர்! 

Last Updated : Oct 5, 2019, 02:14 PM IST
J&K காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டு தாக்குதல்! title=

காஷ்மீர் அனந்த்நாகில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர்! 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் துணை கமிஷனர் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை கையெறி குண்டு வீசி 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 14 பேரில், ஒருவர் போக்குவரத்து போலீஸ்காரர், மற்றவர் ஒரு பத்திரிகையாளர். அவற்றில் ஒன்று முக்கியமானதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் தாங்கள் கொண்டுவந்த கையெறி குண்டுகளை துணை ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து வீசினர். இந்த சம்பவம் இன்று காலை காலை 11 மணியளவில் அலுவலக வளாகத்தின் நுழைவாயிலில் தாக்குதல் நடத்தினர். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மற்றும் ஒரு பத்திரிகையாளரும் காயமடைந்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் ட்வீட் செய்துள்ளனர். இதுவரை சிறிய காயங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், அதற்கான பின்தொடர் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 

 

Trending News