வேர்க்கடலையை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான், அதனை ஏழைகளின் பாதம் என்று அழைப்பார்கள். வேர்க்கடலையில், புரதம், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, ஒமேகா 3 என்னும் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, மெக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இருப்பினும், வேர்க்கடலை எல்லோருக்கும் நன்மை பயக்கும் என கூற இயலாது. சில சூழ்நிலைகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குறிப்பிட்ட உடல் நிலை அல்லது உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்கடலையை உட்கொள்ளவதை தவிர்க்க வேண்டும் அல்லது மிகக் குறைந்த அளவில் (Health Tips) உட்கொள்ள வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா நோயாளிகள்
ஆஸ்துமா நோயாளிகள் வேர்க்கடலையில் இருந்து விலகி இருக்க வேண்டும். வேர்க்கடலையில் உள்ள சில உணவுகள் ஆஸ்துமா தாக்குதல்களை தூண்டும். அதோடு, இது உடலில் அழற்சியை ஏற்படுத்தும், இது ஆஸ்துமா நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும். எனவே, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேர்க்கடலையைத் தவிர்ப்பது நல்லது அல்லது அளவோட் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | உங்களுக்கு குதிகால் வெடிப்புகள் அதிகமாக இருக்கிறதா? குணப்படுத்த வீட்டு வைத்தியம்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
வேர்க்கடலையில் அதிக அளவிலான பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே, இது சிறுநீரக நோய் நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சிறுநீரக நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்பிணிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக அளவில் வேர்க்கடலை சாப்பிடுவது வீக்கம், வயிற்று வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவது கருவில் உள்ள குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, எனவே மருத்துவரை அணுகுவது அவசியம்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள்
வேர்க்கடலையில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருந்தாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும். இது உங்கள் எடை குறைப்பு முயற்சியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குறைந்த அளவில் வேர்க்கடலையை உட்கொள்ளுங்கள்.
அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள்
அனைவருக்கும் வேர்கடலை ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் பொதுவான உணவு ஒவ்வாமைகளில் ஒன்று. வேர்க்கடலை ஒவ்வாமை உடலில் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உங்களுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால், அதை எந்த வடிவத்திலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Zee Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த குப்பை உணவுகளுக்கு குட்பை சொல்லுங்கள்...! புத்தாண்டு உறுதிமொழி வெல்லட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ