கேரளா முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது - தென்மேற்கு பருவமழை ஆரம்பம்

Last Updated : Jun 9, 2016, 10:51 AM IST
கேரளா முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது - தென்மேற்கு பருவமழை ஆரம்பம் title=

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஜூன் மற்றும் ஜூலை மாதம் முழுவதும் பலத்த மழை பெய்யும். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 

பலத்த மழையினால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடலோர பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டதால் வீடுகள் தேசம்  அடைந்துள்ளது. சில வீடுகள் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கையில் குடையை பிடித்துக்கொண்டே சென்றனர்.

எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமலும், நோய்கள் பரவாமல் இருக்க முன்னேச்சிரிக்கை நடவடிக்கை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது.

Trending News