உணவு என்பது மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். இன்றும் கூட, லட்சக்கணக்கான மக்கள் நம் நாட்டில் இரண்டு வேளை உணவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். பசியோடு பலர் காலி வயிற்றுடன் தூங்குகிறார்கள். சிலருக்கு பசி தூக்கத்தையும் தூரமாக்கி விடுகிறது. ஆனால் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதற்காக உழைக்கும் சில உன்னத மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள்.
டெல்லியில் (Delhi), ஒரு நபர் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். பூட்டோ கல்லியில் உள்ள நங்லோயின் ஷியாம் ரசோயி என்ற இடத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை சாப்பாடு 1 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஷியாம் ரசோயி எனப்படும் இந்த இடத்திற்கு வெளியே, ஏழைகள் மட்டுமல்ல, அனைத்து பிரிவு மக்களும் வரிசையில் நிற்கிறார்கள்.
ஒரு அளவுச் சாப்பாட்டில், சாதம், ரொட்டி, சோயா புலாவ், பனீர், சோயாபீன், அல்வா ஆகியவை பெரும்பாலும் இருக்கும். இருப்பினும், இங்கு தினமும் மெனு மாறிக்கொண்டே இருக்கும். மத்திய உணவு மட்டுமல்லாமல், காலை டீயும் இங்கு 1 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
Delhi: 'Shyam Rasoi', near Shiv Mandir in Nangloi is serving food to people at Re 1.
Praveen Goyal, owner says "People donate in kind & help financially. Earlier the cost of food was Rs 10, but we reduced it to Re 1 to attract more people. At least 1,000 ppl eat here each day." pic.twitter.com/QKJ3htAsQN
— ANI (@ANI) October 11, 2020
ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!
ஏ.என்.ஐ அறிக்கையின்படி, ஷியாம் ரசோயியை நடத்தி வரும் 51 வயதான பர்வீன் குமார் கோயல், கடந்த இரண்டு மாதங்களாக இதை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், “நாங்கள் இங்கே 1000 முதல் 1100 வரையிலான மக்களுக்கு உணவு வழங்குகிறோம். மூன்று ஈ-ரிக்ஷாக்கள் மூலம், இந்திரலோக், சாய் மந்திர் போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கு பார்சல்களையும் அனுப்புகிறோம். இங்கு சுமார் 2,000 டெல்லி மக்கள் உணவருந்துகிறார்கள்” என்றார்.
ANI உடன் பேசிய கோயல், "நாங்கள் மக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுகிறோம். நேற்று ஒரு வயதான பெண்மணி வந்து எங்களுக்கு ரேஷன் கொடுக்க முன்வந்தார். மற்றொரு நாள் ஒருவர் எங்களுக்கு கோதுமை கொடுத்தார். இப்படி பலர் அளிக்கும் நன்கொடைகளால் எப்படியோ நடத்தி வருகிறோம். டிஜிட்டல் கட்டண முறை (Digital Payment) மூலம் பலர் எங்களுக்கு உதவுகிறார்கள். இப்போது இருக்கும் தொகையில் இன்னும் ஏழு நாட்களுக்கு எங்களால் இப்படி ஒரு ரூபாய்க்கு உணவளிக்க முடியும். மேலும், முடிந்தவர்கள் உதவி செய்து இந்த சேவை தொடர உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறினார்.
தற்போது, கோயலுக்கு 6 உதவியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவர் விற்பனை அடிப்படையில் ரூ .300-400 வழங்குகிறார். சில உள்ளூர் மற்றும் கல்லூரி மாணவர்கள் அவருக்கு உதவ வருகிறார்கள்.
முன்னதாக ஒரு தட்டு உணவுக்கான விலை ரூ .10 ஆக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அதிக மக்களை ஈர்க்க விலை ரூ .1 ஆக குறைக்கப்பட்டது. இந்த சேவைக்காக ஒரு தொழிலதிபர் அவரது கடையை கோயலுக்கு வழங்கியுள்ளார்.
மற்றவர்களுக்கு உதவ நம்மிடம் அதிக பணம் இருக்க வேண்டும் என பலர் நினைக்கிறோம். ஆனால், மனம் பெரிதாக இருந்தால் போதும், மற்றவையெல்லாம் தானாக அமைந்து விடும் என்பதற்கு தில்லியில் ஒரு ரூபாய்க்கு உணவளிக்கும் இந்த நபர் ஒரு எடுத்துக்காட்டு!!
ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR