காங்கிரஸ் பெயரை நீக்கவில்லை: மம்தா பானர்ஜி விளக்கம்!

கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கவில்லை என மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 24, 2019, 10:15 AM IST
காங்கிரஸ் பெயரை நீக்கவில்லை: மம்தா பானர்ஜி விளக்கம்! title=

கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கவில்லை என மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முத்திரை, பேனர், சுவரொட்டிகளில் காங்கிரஸ் என்ற பெயரை அக்கட்சி நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. முன்னதாக கட்சியின் பெயரை திரிணாமூல் என்றே கட்சி அழைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதை மறுத்து மம்தா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் கமிஷனில் அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் தான் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு 1998 ம் ஆண்டு ஜனவரி 1 அன்று தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தது. அதனால் கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை நீக்க முடியாது என தெரிவித்துள்ளது. 

Trending News