வரும் 29ம் தேதி 4-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மும்பை உள்பட 17 தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல்7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
> முதல் கட்டமாக வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வருகிற 11ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
> இரண்டாம் கட்டமாக புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது.
> 3-ம் கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
> 4-ம் கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி நந்தூர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 9ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 10ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 12ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.