நாளுக்கு நாள் உச்சம்! ஒரே நாளில் 3.52 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  மொத்தம் 3,52,991 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 2,812 பேர் மரணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 2,19,272 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 26, 2021, 10:58 AM IST
நாளுக்கு நாள் உச்சம்! ஒரே நாளில் 3.52 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது title=

புதுடெல்லி: இன்று நாட்டில் 3,52,991 பேருக்கு புதிய கோவிட் பாதிப்பு மற்றும் 2,812 இறப்புகளுடன், இந்தியா ஒரு புதிய சாதனையை எட்டியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ளது. COVID-19 தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலைக்கு மத்தியில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 3.52 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று (COVID-19 Pandemic) உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில், ஒரே நாளில் அதிக பாதிப்பு பதிவானது இதுவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  மொத்தம் 3,52,991 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 2,812 பேர் மரணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 2,19,272 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் (Positive Cases) மொத்த எண்ணிக்கை இப்போது 1,73,13,163 ஆக உள்ளது. அதில் 1,95,123 இறப்புகள் மற்றும் 1,43,04,382 பேர் மேட்கப்பட்டு உள்ளனர். 

ALSO READ |  நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க PM CARES நிதியிலிந்து ஒதுக்கீடு

ஏப்ரல் 25 வரை கோவிட் -19 தொற்று கண்டறிய 27,93,21,177 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) தெரிவித்துள்ளது. இதில் 14,02,367 மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்டன.

இதுவரை 14,19,11,223 பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News